KP.S Sithi Vinayagar Kovil Charitable Trust
No.25/34, Venkatachalam Street, N.Pudur, Karaikudi – 630 001
Sri Sithi Vinayagar Kovil
Jeyamkondapuram · Sekkalai · Karaikudi
செக்காலை ஸ்ரீ சித்தி விநாயகர் துதி
செக்காலை மேவும்சிற் சித்தி விநாயகனே
எக்காலும் நல்வழியே ஏற்றிடுவாய் – திக்கெல்லாம்
போற்றும் செயங்கொண்ட புத்தியினைத் தந்துமகிழ்
ஆற்றுவாய் அன்பு நெறி.
பொழிப்புரை
செக்காலையில் எழுந்தருளியிருக்கும் சித்திகளைத் தரும் விநாயகனே,
எக்காலத்திலும் எங்களை நல்வழியில் செலுத்துவாய்;
திசைகளெல்லாம் போற்றுகின்ற வெற்றி பொருந்திய நல்லறிவினைத் தந்து,
அன்பான வழியில் எங்களை மகிழ்வித்து வழிநடத்துவாய்.